;
Athirady Tamil News

2019 ஆம் ஆண்டு உலக கிண்ண தொடரில் இலங்கை சிரேஷ்ட வீரர்கள்…!!

0

2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண கோப்பையில் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்கள் பங்குபற்ற வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு உலக கிண்ண தொடர் நடைபெறவுள்ளது. இதனடிப்படையில் தற்போது இத் தொடருக்கான தகுதி பெற்ற அணிகளை விட ஏனைய அணிகளுக்கான தகுதி போட்டி கடந்த 4 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது.

இதனடிப்படையில் இலங்கை அணி ஏற்கனவே தகுதி பெற்ற அணிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இதனால் நடைபெறவுள்ள உலக கோப்பை தொடர் குறித்து இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளதாவது, “இலங்கை அணி சார்பாக உலக கிண்ண போட்டியில் சிரேஷ்ட வீரர்களான மெத்யூஸ் மற்றும் சந்திமல் பங்குபற்ற வேண்டும்.

ஏனெனில் இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணிக்கு இது அத்தியாவசியாமானதாகும். இருந்தபோதும் இவர்கள் அண்மையில் நடைபெற்ற போட்டியில் இவர்கள் தமது திறமையை வெளிக்காட்ட சந்தர்ப்பம் அமையவில்லை” என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + 8 =

*