;
Athirady Tamil News

பன்னம்பிட்டிய பகுதியில் மயங்கி விழுந்த இருவர் பலி…!!

0

தம்புள்ளை, பன்னம்பிட்டிய பகுதியில் மலிகை சமான்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றமதி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் நேற்று (22) இரவு பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை, பன்னம்பிட்டிய பகுதியை சேர்ந்த மதுஷான் ஜயவர்தன எனும் 19 வயதுடைய இளைஞன் ஒருவனும், அம்புல்அபே பகுதியை சேர்ந்த நிரோஷா தில்ருக்ஷி எனும் 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த தொழிற்சாலையில் உள்நாட்டு மலிகை சமான்களை அரைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றமதி செய்யும் நடவடிக்கைகள் பகல் காலங்களை இரவு நேரங்களிலும் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 9.30 மணியளவில் சேரா எனும் கிழங்கு வகையை அரைக்கும் போது குறித்த இருவரும் மயக்கமுற்ற விழுந்தததை அடுத்து அவர்கள் இருவரையும் தம்புள்ளை வைத்தியசாலைக்கு அனுமதித்துள்ளனர்.

எவ்வாறாயினும் அவர்களை வைத்தியசாலைக்கு அனுமதிக்கு போதே அவர்கள் உயிரிழந்து இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் இருவரின் சடலமும் தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்படுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + four =

*