;
Athirady Tamil News

லசந்த படுகொலை தொடர்பான அறிக்கைகள்…!!

0

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரம துங்கவின் படுகொலை தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் அடங்கிய சில அறிக்கைகள் மேலதிக விசாரணைகளுக்காக கோரப்பட்டுள்ளன.

பாராளுமன்றில் லசந்தவின் கொலை தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் அடங்கிய ஹன்சார்ட் அறிக்கைகளை கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு மேலதிக விசாரணைகளுக்காக கோரியுள்ளது.

சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி அலுவலகத்திற்கு தனது காரில் செல்லும் போது அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்ட இந்த கொலை தொடர்பான விசாரணைகள் 2015 ஆம் ஆண்டு வரை கிடப்பில் போட்டப்பட்டிருந்தன.

எனினும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் லசந்த விக்ரமதுங்க உள்ளிட்ட ஏனைய படுகொலைகள் தொடர்பான விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நிலையில் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் அடங்கிய ஹன்சாட்ர் அறிக்கைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளுக்கென கோரியுள்ளது.

கல்கிஸை நீதிவான் மொஹம்மட் மிஹாலிடம் இடையீட்டு மனுவூடாக குற்றப் புலனய்வுப் பிரிவு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

அத்துடன் லசந்த விக்ரமதுங்க பயன்படுத்திய வங்கிக்கணக்குகள் தொடர்பிலான விபரங்களை அந்தந்த வங்கிகளிடமும் அவர் தொடர்புகளை மேற்கொண்ட தொலைபேசி இலக்கங்கள் தொடர்பிலான விபரங்களை சேவை வழங்கும் தொலைபேசி நிறுவனங்களிடமும் குற்றப் புலனாய்வுப் பிரிவு கோரியுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ள கல்கிஸை நீதிவான் நீதிமன்றம், ஹன்சார்ட் அறிக்கை, தொலைபேசி தொடர்பிலான அறிக்கை மற்றும் வங்கிக்கணக்கு தொடர்பான அறிக்கைகளை விசாரணைப் பிரிவுக்கு கையளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + 7 =

*