;
Athirady Tamil News

இலங்கையில் 53 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகள். அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு…!!

0

இலங்கையில் வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக வேலையற்ற பட்டதாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் பெற்றுக்கொடுப்பது தொடர்பாக பிரத்தியேக வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க அரசாங்கத்தால் முடியாமல் போயுள்ளதாக சங்கத்தின் ஏற்பாட்டாளர் தென்னே ஞானா நந்த தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை அரசியல் பட்டதாரிகளுக்கான 60,000 வெற்றிடங்கள் நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார். வேலையற்ற பட்டதாரிகள் அரச தொழில்களை மாத்திரம் எதிர்பார்ப்பது பயனற்ற நடவடிக்கை என அரச பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி கூறியுள்ளமை வேடிக்கையானது எனவும் தென்னே ஞானா நந்த தேரர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் அரசியல் ரீதியான அரசாங்க நியமனங்களுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்க விரும்புவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச நிறுவனங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.

இதேவேளை, அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் தொழில் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமொன்றை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × four =

*