;
Athirady Tamil News

வவுனியா சுந்தரபுரத்தில் ஒருநாள் இலவச மருத்துவ முகாம்…!! (படங்கள்)

0

வவுனியா சுந்தரபுரம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் இன்று காலை 9மணியளவில் ஒரு நாள் இலவச மருத்துவ முகாம் இடம்பெற்றுள்ளது.

ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இறம்பைக்குளம் ஈஷி மிஷன் பூரண சுவிஷேச சபையின் அனுசரணையில் பிரதான பிஷப் பி. எம். இராஜசிங்கத்தினால் இலவச மருத்துவ முகாமில் மருத்துவப்பரிசொதனைகள் மேற்கொள்ளப்பட்டு இலவச மூக்குக்கண்ணாடிகள் அப்பகுதியிலுள்ள 115பேருக்கு வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சுந்தரபுரம் கிராம அலுவலகர், ஈச்சங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − fourteen =

*