;
Athirady Tamil News

உ.பி.யில் ஆட்டோ – டிரக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பக்தர்கள் பலி..!!

0

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பக்தர்கள் சென்ற ஆட்டோ மற்றும் டிரக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தவுலதியா பகுதியில் இருந்து தாம் என்ற இடத்தில் உள்ள கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஒரு குழு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தது. அவர்கள் சென்ற ஆட்டோ பிரதாப்கர் மாவட்டத்திற்குட்பட்ட பட்டான்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டெம்போ உடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தை தொடர்ந்து டெம்போ ஓட்டுனர் தப்பியோடிவிட்டார்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய ஒட்டுனரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 2 =

*