;
Athirady Tamil News

மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

0

பாராளுமன்றத்தில் காலியாக உள்ள மாநிலங்களை எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் உத்தரப்பிரதேசம் – 10, மேற்கு வங்காளம் 5, கர்நாடகம் 4, தெலுங்கானா 3, ஜார்க்கண்ட் – 2, சத்தீஸ்கர் என மொத்தம் 25 எம்.பி.க்கள் இடங்களுக்கான தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ.க. 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 10 =

*