;
Athirady Tamil News

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது..!!

0

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொகவந்தலாவ பொகவானை தோட்டபகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்யதுள்ளதாக தெரிவித்தனர் .

இந்த சம்பவம் 24.03.2018 சனிக்கிழமை அதிகாலை 04.30 மணியளவில் இந்த இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

பொகவந்தலாவ பொலிஸாரினால் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொகவந்தலாவ ஆரியபுற பகுயை சேர்ந்த ஒருவரும் பொகவானை தோட்டபகுயை சேர்ந்த ஒருவருமே கைது செய்யபட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர் .

கைது செய்யபட்ட இரண்டு சந்தேக நபர்களையும் இன்று (24) சனிக்கிழமை ஹட்டன் நீதவான் முன்னிலையில் அஜர்படுத்துவற்கான நடவடிக்கைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − ten =

*