;
Athirady Tamil News

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை..!!!

0

ஹொரண, இலிம்ப பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தீவிரமடைந்ததையடுத்து இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரண, பொருவாதண்ட பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சடலம் தற்போது ஹொரண வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதம் தொடர்பான பரிசோதனை இன்று இடம்பெற உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைச் சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 16 =

*