;
Athirady Tamil News

இரும்பு கம்பிகளை திருடிய சீனப் பிரஜை கைது..!!

0

ஹம்பாந்தோட்டை – சூரியவெவ, வல்சபுகல பிரதேசத்தில் அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிக்க பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகளை கொள்ளையிட்ட சீனப் பிரஜை மற்றும் உள்நாட்டவர் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிக்க பயன்படுத்தப்படும் இரும்பு கம்பி தொகை காணாமல் போயுள்ளமை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து 7 ஆயிரம் கிலோகிராம் கம்பிகளை சுமை ஊர்தியில் எடுத்துச் சென்ற இந்த சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

34 வயதான செவனகல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும், 54 வயதான சீனப் பிரஜையுமே சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதுடன், சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + ten =

*