;
Athirady Tamil News

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி..!!

0

குளியாப்பிட்டிய, கிதலவ பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர்் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி எதிரில் வந்த லொறியுடன் மோதி விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்களும் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

கோதுருவாபொல, நக்காவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + eighteen =

*