;
Athirady Tamil News

இலங்கை மக்களுக்கு மருத்துவர்கள் விடுத்த எச்சரிக்கை..!!

0

இலங்கையில் பரவி வரும் காசநோயால் ஆபத்து என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் காசநோய் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் கடந்த வருடம் 8 ஆயிரத்து 511 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 8 ஆயிரத்து 112 பேர் புதிதாக இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பரவ கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதால் அவதானமாக இருக்கும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் காசநோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை நாடும்படியும் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 5 =

*