;
Athirady Tamil News

மண்சரிவு அச்சுறுத்தலுடன் வாழும் கொத்மலை – லிலஸ்லேண்ட் தோட்ட மக்கள்..!!

0

மண்சரிவு அச்சுறுத்தலுடன் வாழும் தமக்கு உரிய பாதுகாப்பினை வழங்குமாறு கோரி கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வெதமுல்ல லிலிஸ்லேண்ட் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

மண்சரிவு அச்சுறுத்தலுடன் வாழும் கொத்மலை – லிலஸ்லேண்ட் தோட்ட மக்கள்

105 குடும்பங்கள் தொடர்ந்தும் மண்சரிவு அபாய அச்சுறுத்தல்களுடன் தொடர்ந்தும் வாழ்ந்து வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வெதமுல்ல லிலிஸ்லேண்ட் தோட்டத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி பாரிய மண்சரிவு ஏற்பட்டதில் 7 பேர் உயிரிழந்தனர்.

எனினும் முற்றாக வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுப்பட்டதோடு, மண்சரிவு அபாயமாக இருந்த ஏனைய குடும்பத்தாருக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என அதிகாரிகளால் வாக்குறுதிகள் வழங்கப்பட்டது.

எனினும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நேற்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

மண்சரிவு அச்சுறுத்தலுடன் வாழும் கொத்மலை – லிலஸ்லேண்ட் தோட்ட மக்கள்

சுமார் 300ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும், கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ அல்லது அரசியல்வாதிகளோ இதுவரை எவ்வித உதவிகளை செய்து தரவில்லை என மக்கள் விசனம் வெளியிட்டனர்.

குறித்த தோட்டப் பகுதியைச் சுற்றி, கற்பாறைகள் காணப்படுகின்றன நிலையில் எந்தநேரமும் உயிரிழப்புக்கள் ஏற்படக் கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக தெரிவித்த மக்கள், உயிரிழப்புக்களும் அழிவுகளும் இடம்பெறுவதற்கு முன்னர் அரசாங்கமும், அரசியல்வாதிகளும் கண்விழித்து மக்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 − four =

*