;
Athirady Tamil News

எகிப்து நாட்டில் போலீஸ் உயரதிகாரியை குறிவைத்து தாக்குதல் – இருவர் பலி..!!

0

எகிப்து நாட்டின் அலெக்ஸான்டிரியா நகர பாதுகாப்புத்துறை உயரதிகாரியாகவும், போலீஸ் மேஜர் ஜெனரலுமான மொஸ்தபா அல்-நேம்ர் இன்று தனது பாதுக்காப்பு அதிகாரிகளுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சாலையோரம் நின்றிருந்த ஒரு காரில் மறைத்து வைத்திருந்த குண்டு வெடித்த சம்பவத்தில் ஒரு போலீஸ்காரரும், கார் டிரைவரும் உடல் சிதறி உயிரிழந்தனர்.

மேலும் 4 போலீஸ்காரர்கள் படுகாயம் அடைந்தனர் என எகிப்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இன்னும் இருநாட்களில் அங்கு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்றைய குண்டுவெடிப்பு சம்பவத்தால் அலெக்ஸான்டிரியா நகர மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 16 =

*