;
Athirady Tamil News

லண்டனில் கமெராவை திருட முயன்ற மொப்பெட் கொள்ளையர்கள்..!!!

0

வாகன ஓட்டிகள் முன்னிலையில் லண்டனில் தேம்ஸ் நதியின்மீது அமைக்கப்பட்டுள்ள பாலத்திலிருந்த TV கமெராவை மொப்பெட் திருடர்கள் சிலர் திருட முயன்றனர்.

தேம்ஸ் நதியின் மீது அமைக்கப்பட்டுள்ள Putney பாலத்தில் போக்குவரத்து நெரிசலான நேரத்தில் மூன்று மொப்பெட்களில் வந்த ஹெல்மட் அணிந்த ஆறு கொள்ளையர்கள் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்திவிட்டு பாலத்திலிருந்த TV கமெராவை அகற்ற முயன்றனர்.

அதை அகற்ற முடியாததால் angle grinder என்னும் கருவியின் உதவியால் கமெராவை வெட்ட முயன்றனர்.அப்போதும் அவர்களது முயற்சி தோல்வி அடையவே அவர்கள் தங்கள் மொப்பெட்களை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு விரைந்தனர்.

அதிர்ச்சியுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிலர் மீதும் ஒரு கொள்ளையன் angle grinderஐ வீசுவதுபோல் அச்சுறுத்தினான்.

மக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த சம்பவம் லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சம்பவ இடத்திற்கு பொலிசார் வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

அவர்கள் எதற்காக கமெராவை திருட முயன்றார்கள் என்பது தெரியவில்லை.இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − 6 =

*