;
Athirady Tamil News

பாரீஸில் இலவசப் போக்குவரத்து திட்டத்திற்கு எதிர்ப்பு..!!

0

காற்று மாசுவைக் குறைப்பதற்காக பாரீஸில் பொதுப் போக்குவரத்தை இலவசமாக்குவதற்கான முயற்சிகளில் பாரீஸ் மேயர் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் இந்த திட்டத்திற்கு போக்குவரத்துத் துறை அதிகாரி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

நகரம் முழுவதும் பொதுப்போக்குவரத்தை இலவசமாக்குவதற்காக ஆய்வுகளை நடத்துவதற்கான திட்டங்களை பாரீஸ் மேயர் Anne Hidalgo அறிவித்துள்ளார்.

உலகின் பெரிய நகரங்களில் பல, தூய்மையான போக்குவரத்தை ஏற்படுத்துவதற்காகவும் காற்றின் தரத்தை உயர்த்துவதற்காகவும் கார்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இத்தகைய காரணங்களுக்கு பொதுப் போக்குவரத்தை இலவசமாக்குதல் பொருத்தமான நடவடிக்கையாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் வரி செலுத்துவோரின் பாரத்தை அதிகமாக்கும் என்று உள்ளூர் போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
Valerie Pecresse என்னும் அந்த அதிகாரி மேயரின் ஆலோசனையை நிராகரித்துள்ளார்.

பயணிகள் போக்குவரத்துக்கு பணம் செலுத்தவில்லை என்றால், அதற்கு பதில் வரி செலுத்துவோர் பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

நம்முடைய நோக்கம் போக்குவரத்தை நவீனமாக்குவதுதான் என்று கூறிய அவர் பேருந்து கட்டணத்தின்மூலம் நமக்கு ஆண்டொன்றுக்கு 3 பில்லியன் யூரோக்கள் வருவாய் வருகிறது.

அந்தப் பணம் நமக்குத் தேவை என்று அவர் கூறியுள்ளார். 2020ஆம் ஆண்டு மேயர் தேர்தலில் தற்போதைய மேயரை எதிர்த்துப் போட்டியிட இருக்கும் Valerie Pecresse, பாரீஸில் இருப்பவர்களுக்கு மட்டும் போக்குவரத்தை இலவசமாக்கிவிட்டு புற நகர் பகுதியில் இருப்பவர்களை தவிக்க விடுவது சரியில்லை என்று கூறுகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 4 =

*