;
Athirady Tamil News

பேரூந்தின் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை..!!

0

தனியார் பேரூந்து ஒன்றின் முன்பாக பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தென்னிலங்கையில் நடைபெற்றுள்ளது. மாத்தறை -கதிர்காமம் வீதியில் தங்காலைப் பிரதேசத்தில் இன்று நண்பகல் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

மாத்தறையிலிருந்து மொனராகலை ​நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேரூந்து ஒன்றின் முன்பாக தங்காலைப் பிரதேசத்தில் வைத்து நபரொருவர் திடீரென்று பாய்ந்துள்ளார்.

வேகமாகப் பயணித்துக் கொண்டிருந்த பேரூந்தின் மீது மோதுண்ட நபர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட நபர் தங்காலையின் ரன்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் வேறொரு நபரை கூரிய ஆயுதங்களால் கடுமையாக தாக்கி விட்டு அதன் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக பேரூந்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளமையும் தெரிய வந்துள்ளது்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − 4 =

*