;
Athirady Tamil News

வவுனியா வடக்கு கல்வி பணிப்பாளராக சு. அன்னமலர் நியமனம்…!!

0

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் நிலவி வந்த கல்விப்பணிப்பாளர் வெற்றிடத்திற்கு திருமதி சுரேந்திரன் அன்னமலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 26ம் திகதியில் இருந்து கடமைகளை பெறுப்பெற்கவுள்ள இவர் வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் பிரதி கல்விப்பணிப்பாளராக இதுவரை கடமையாற்றி வந்திருந்தார்.

கடந்த டிசம்பர் மாதத்துடன் வலயக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றி வந்த ஸ்ரீஸ்கந்தராஜா ஓய்வு பெற்று சென்ற பpன்னர் வவுனியா வடக்கு வலயத்திற்கு நிரந்தரமான வலயகல்வி பணிப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை

என்பதுடன் வவுனியா தெற்கு வலய கல்வி கல்வி பணிப்பாளர் மு.ராதாகிருண்ணன் வடக்கு வலயத்தினையும் நிர்வகித்து வந்த நிலையில் சு. அன்னமலர் கல்விப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவை சேர்ந்த இவர் கல்வி நிர்வாக சேவையின் ஊடாக வவுனியா மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியிருந்த நிலையில் வவுனியா தெற்கு கல்வி வலயத்திலும் சில ஆ டுகள் பிரதிக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × four =

*