;
Athirady Tamil News

அரசியல் கைதியின் விடுதலைக்காக வவுனியாவில் கையெழுத்து போராட்டம்..!! (படங்கள்)

0

அரசியல் கைதியின் விடுதலைக்காக வவுனியாவில் கையெழுத்து போராட்டம் வவுனியா இலுப்பையடியில் இடம்பெற்றது.

கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனின் மனைவி ஆனந்த சுதாகர் யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.

இவரின் இறுதிக் கிரியைகள் கிளிநொச்சிஇ மருதநகர் கிராமத்தில் இடம்பெற்றபோது மனைவியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்காக பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் மூன்று மணி நேரமே கால அவகாசம் வழங்கப்பட்டு மனைவியின் மரணச்சடங்கில் கலந்து கொண்ட பின் மீண்டும் பொலிஸாரால் சிறைச்சாலை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.

இதன்போது தந்தை சிறைச்சாலை வாகனத்தில் ஏறியபோது அவரது மகளும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவம் அனைவரது மனதையும் நெகிழ வைத்துள்ளது. நீதிமன்றின் ஊடாக 97 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான ஆனந்த சுதாகருக்கு மகனும் மகளும் என இரு பிள்ளைகள் உள்ளனர். தந்தை கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பின்னர் தாயின் அரவணைப்பில் வாழ்ந்த இரண்டு பிள்ளைகளும் தற்போது தந்தையையும் தாயையும் இழந்த நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே இவரை நிபந்தனையற்ற பொது மன்னிப்பில் ஜனாதிபதி விடுதலை செய்யக்கோரி வவுனியா மாவட்டத்தில் இன்று கையெழுத்து போராட்டத்தினை வவுனியா மாவட்ட சுயாதீன இளைஞர்களின் தமிழ் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + twenty =

*