;
Athirady Tamil News

ஐ.தே.க.வுடன் தொடர்ந்தும் பயணிப்பதில் சந்தேகம்: ரவூப் ஹக்கீம்..!!

0

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனியும் இணைந்து பயணிப்பது என்பது மிகவும் கடினமான விடயம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பாகத் தெரிவான உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்றது.

அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘கடந்த 3 வாரங்களாக சிறிகொத்தவில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களைச் சந்திந்துப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னர் எமக்கு நடந்த நம்பிக்கை மோசடிகளைப் பார்க்கின்றபோது, இனியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் வெற்றியீட்டிய சபைகளில், எம்மைப் புறந்தள்ளிவிட்டு மாற்று அணிகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைத்தால் அரசியல் ரீதியாக அதற்குத் தகுந்த பதிலடி கொடுப்போம்.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக, ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவின் பின்னர்தான் இறுதித் தீர்மானங்கள் எட்டப்படும்’ என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + twelve =

*