;
Athirady Tamil News

பகல் நேரம் சங்கிலி அறுக்க முற்பட்ட இருவர் கைது..!!

0

மானிப்பாய் பிரதேச சபைக்கு முன்னாள் வீதியால் சென்ற பெண் ஒருவரின் தங்கச்சங்கிலியினை அறுக்க முற்பட்ட இரு இளைஞர்களை நேற்று(23) கையும் மெய்யுமாக பிடித்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான இருவரும் மாதகல் பகுதியினை சேர்ந்த 21 வயதுடைய நபர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் வீதியால் சென்ற பெண்ணின் தங்கச்சங்கிலியினை அறுக்க முற்பட்டுள்ளனர். அந்த பகுதியில் சிவில் உடையில் நின்ற பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய குறித்த இரு இளைஞர்களும் துரத்தி பிடிக்கப்பட்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − eight =

*