;
Athirady Tamil News

மன்னார்குடியில் குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை முயற்சி..!!

0

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சி.ஆர்.சி. டெப்போ முன்சிபல் காலனியில் வசித்து வருபவர் ஆலமுத்து மனைவி தமிழரசி (வயது 30). ஆலமுத்து வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றார். அங்கு 3 மாதங்களுக்கு முன்பு அவர் இறந்து விட்டார்.

இதைத் தொடர்ந்து தமிழரசி தனது குழந்தைகள் சியாம் (11), மனிசா (9) ஆகியோருடன் வசித்து வந்தார். அவர் ஒரு ஸ்டூடியோவில் ஊழியராக பணியாற்றி வந்தார். அதன் மூலம் கிடைத்த வருமானத்தை கொண்டு குழந்தைகளை படிக்க வைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

இதில் மனமுடைந்த தமிழரசி நேற்று இரவு தனது குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு அவரும் குடித்து விட்டார். இதனால் அவர்களுக்கு வாந்தி ஏற்பட்டது. இது பற்றி அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விசாரித்த போது தமிழரசி குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து அவரும் குடித்தது தெரியவந்தது.

உடனே அவர்களை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 5 =

*