;
Athirady Tamil News

டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஜெர்மன் அதிபர் சந்திப்பு..!!

0

ஜெர்மன் அதிபர் பிராங்க் வால்டர் ஸ்டையின்மர் நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த 22-ம் தேதி இந்தியா வந்த அவர், வாரணாசியில் உள்ள கங்கை நதியில் படகு சவாரி செய்தபடி கங்கையம்மன் ஆரத்தியை கண்டு மகிழ்ந்தார். இதே போன்று டெல்லி ஜம்மா மசூதியையும் அவர் அதிகாரிகள் குழுவுடன் பார்வையிட்டார்.

இந்த நிலையில் புதுடெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பின்னர் சுந்தர் நர்சரியில் இருவரும் நடந்துகொண்டே கலந்துரையாடினர். முன்னதாக வெளியுறத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார்.

நாளை (25-ம் தேதி) சென்னை வரும் ஸ்டெய்ன்மெய்ர், ஒரகடத்தில் உள்ள டெய்ம்லர் (Daimler) கார் நிறுவனத்திற்கு சென்று நிர்வாகிகளுடன் உரையாடுகிறார். பின்னர் ஐ.ஐ.டியின் ஆராய்ச்சிப்பூங்காவைப் பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

திங்கட்கிழமை (26-ம்தேதி) ஸ்டையின்மர் தொழிலதிபர்களை சந்திக்க இருப்பதாகவும், மாமல்லபுரத்திற்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − fourteen =

*