;
Athirady Tamil News

வாழ்க்கைத்தரம் சிறந்து விளங்கும் நகரங்களின் பட்டியலில் சூரிச்..!!

0

Mercer என்னும் அமைப்பு ஆண்டுதோறும் நடத்தும் ஆய்வில் உலகில் தரமான வாழ்வை வழங்கும் இரண்டாவது நகரமாக சுவிட்சர்லாந்தின் பெரிய நகரமான சூரிச் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

பட்டியலில் ஜெனிவா எட்டாவது இடத்தையும் Basel பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.ஆஸ்ட்ரியாவின் தலைநகரான வியன்னா ஒன்பதாவது முறையாக முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

Munich மற்றும் Auckland இரண்டும் இணைந்து மூன்றாவது இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன.அதே நேரத்தில் ஈராக்கின் தலைநகரான பாக்தாத் ஆய்வில் மோசமான நகரம் என்று பெயரெடுத்துள்ளது.

Mercer நடத்திய ஆய்வில் உலகம் முழுவதிலுமுள்ள 231 நகரங்கள் பங்கு பெற்றுள்ளன.அரசியல் நிலைத்தன்மை, சுகாதாரம், கல்வி, குற்றம் மற்றும் போக்குவரத்து ஆகியவை ஆய்வின் முக்கியக் காரணிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டன.

உலகின் இனிமையான நகரங்களில் பத்தில் எட்டு நகரங்களைத் தன்னகத்தே கொண்ட ஐரோப்பா முன்னணியில் நிற்கிறது.

நிறுவனங்களும் அமைப்புகளும் தங்களது சர்வதேச ஊழியர்களுக்கு இழப்பீட்டுத் தொகை மற்றும் துயர்கால சலுகைகளை வழங்குவதைத் தீர்மானிப்பதற்கு உதவும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 9 =

*