;
Athirady Tamil News

ஜேர்மானியர்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ள சுவிட்சர்லாந்து அதிகாரிகள்..!!

0

உளவு பார்த்ததாகவும் வங்கி ரகசியங்களை மீறியதாகவும் மூன்று ஜேர்மானியர்கள்மீது சுவிட்சர்லாந்து அதிகாரிகள் வழக்குத் தொடர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனி பத்திரிகையான Die Zeit, the Correctiv research group, ஜேர்மனி தொலைக்காட்சியான ZDF மற்றும் Swiss பத்திரிகையான Republik ஆகியவை, மூன்று ஜேர்மானியர்கள் ரகசிய ஆவணங்களை ஜேர்மானிய நீதிமன்றம் மற்றும் அதிகாரிகளுக்கு கடத்தியதாக சூரிச் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வழக்கு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை இன்னும்அதிகமாக்கலாம் என்று கருதப்படுகிறது.

பல ஆண்டுகளாகவே வரி விதிப்பிலிருந்து தப்புவதற்காக சுவிட்சர்லாந்தில் பணத்தை பதுக்கும் குடிமக்களின் விவரங்களைப் பெற ஜேர்மன் அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.

சமீபத்தில் நவம்பர் 2017இல் ஜேர்மனி வரித்துறை அதிகாரிகளை உளவுத்துறை சார்பில் உளவு பார்த்ததாக சுவிஸ் குடிமகன் ஒருவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.

எந்த அதிகாரிகள் சுவிஸ் வங்கிகளின் ஜேர்மானிய வாடிக்கையாளர்களை கண்டுபிடிக்க முயல்கிறார்கள் என்று அவர் உளவு பார்த்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் சுவிஸ் அரசோ ஜேர்மனியோ இந்த சம்பவம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மேலும் குற்றம் சாட்டப்பட்டதாகக் கூறப்பட்ட அதிகாரிகளும் இந்த செய்தியை மறுத்துள்ளார்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + seven =

*