;
Athirady Tamil News

சிறுமியை துஷ்பிரயோகம் செய்து எரித்துக் கொன்ற கொடூரம்..!!

0

இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து எரித்துக் கொன்ற 2 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அஸ்ஸாம் மாநிலத்தின் நகோவன் மாவட்டத்தில் 5-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை 2 சிறுவர்கள் மற்றும் ஒரு இளைஞன் ஆகியோர் சேர்ந்து கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மட்டுமின்றி, குறித்தச் சிறுமியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

90 சதவிகித தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அச்சிறுமி, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக பொலிசார் தெரிவிக்கையில், சிறுமியிடம் மரண வாக்குமூலம் பெற்றுள்ளோம். முதற்கட்ட விசாரணையில், இந்தக் குற்றச்செயலில் 10 மற்றும் 11 வயது நிரம்பிய இரண்டு சிறுவர்களும், 21 வயது இளைஞர் ஒருவரும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அந்த இரண்டு சிறுவர்களைக் கைது செய்துள்ளோம்.

மற்றொருவர் தலைமறைவாக உள்ளார். அவரைத் தேடும் பணியைத் துரிதப்படுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + eighteen =

*