;
Athirady Tamil News

வடக்கு ஆளுநராக தமிழர் நியமனம்..!!

0

வடக்கு மாகா­ணத்துக்குத் தமிழ் ஆளு­நர் ஒரு­வர் நிய­மிக்­கப்­ப­ட­ வுள்­ளார். இது தொடர்­பான உத்­த­ரவு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன வால், அவர் பாகிஸ்­தான் புறப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தா­கப் பிறப்­பிக்­கப்­பட்­டதா­கத் தெரி­கி­றது. மேல்­மா­காண ஆளு­ந­ராக கட­மை­யாற் றிய கே.சி.லோகேஸ்­வ­ரனே வடக்கு மாகாண ஆளு­ந­ராக நிய­மிக்­கப் ப­ட­வுள்ளார்.

வடக்­குக்கு மட்­டு­மன்றி 9 மாகாணங்­க ளின் ஆளு­நர்­க­ளை­யும் அதி­ர­டி­யாக இட­மாற்­றம் செய்­துள்­ளது அரசு. வர­லாற்­றில் முதல் தட­வை­யாக தமி­ழர் ஒரு­வரை வடக்கு மாகாண ஆளு­ந­ராக நிய­மிக்­கத் தீர்­மா­னித்­துள்­ளது.

அரச தலைவர் மைத்­தி­ரி­பால சிறி­சேன பாகிஸ்­தா­னுக்­கான உத்­தி­யோ­க­பூர்வ பய­ணத்தை ஆரம்­பிக்க முன்­னர் அனைத்து மாகா­ணங்­க­ளின் ஆளு­நர்­க­ளை­யும் கொழும்­பில் சந்­தித்­துப் பேசி­னார்.

ஆளு­நர் ஒரு­வ­ரின் சேவைக்­கா­லம் ஒரே இடத்­தில் மூன்று வரு­டங்­கள் என வரை­ய­றுக்­கப்­பட்­டுள்­ள­தால் தற்­போது சேவை­யில் உள்ள அனைத்து ஆளு­நர்­க­ளும் இட­மாற்­றப்­ப­ட­வுள்­ள­னர் என்று அப்­போது அறி­வித்­தார்.

இதன்­படி சப்­ர­க­முவ மாகாண ஆளு­நர் மார்­ஷல் பெரேரா தென் மாகாண ஆளு­ந­ரா­க­வும், மத்­திய மாகாண ஆளு­நர் நிலுக்கா ஏக்­க­நா­யக்க சப்­ர­க­முவ மாகாண ஆளு­ந­ரா­க­வும்,தென்­மா­காண ஆளு­நர் ஹேம­கு­மார நாண­யக்­கார மேல்­மா­காண ஆளு­ந­ரா­க­வும், மேல்­மா­காண ஆளு­நர் கே.சி.லோகேஸ்­வ­ரன் வடக்கு மாகாண ஆளு­ந­ரா­க­வும், வட­மேல் மாகாண ஆளு­நர் அமரா பிய­சீலி ரத்­நா­யக்க வட­மத்­திய மாகாண ஆளு­ந­ரா­க­வும், வட­மத்­திய மாகாண ஆளு­நர் பி.பீ.திசா­நா­யக்க வட­மேல் மாகாண ஆளு­ந­ரா­க­வும் இட­மாற்­றப்­பட்டு நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ள­னர்.

அதே­வேளை, ஊவா மற்­றும் கிழக்கு மாகாண ஆளு­நர்­கள் இட­மாற்­றம் செய்­யப்­ப­ட­மாட்­டார்­கள் என்று அறி­ய­மு­டிந்­தது. இது­வரை மேல் மாகாண ஆளு­நர்­க­ளாக தமி­ழர்­களே நிய­மிக்­கப்­பட்டு வந்­த­னர். அதே­போல் வடக்கு மாகாண ஆளு­நர்­க­ளாக சிங்­க­ள­வர்­களே நிய­ம­னம் பெற்று வந்­த­னர். இப்­போது அந்­தப் பாரம்­ப­ரி­யம் மாறு­கின்­றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 4 =

*