வவுனியா மாவட்டத்தில் குற்றப்பணமாக 16 இலட்சத்து 16500 ரூபா அறவிடப்பட்டுள்ளது..!!

வவுனியா மாவட்டத்தில் குற்றப்பணமாக 16 இலட்சத்து 16500 ரூபா அறவிடப்பட்டுள்ளது! மதுவரி திணைக்களம் தெரிவிப்பு!
வவுனியா மாவட்டத்தில் 2017 ஆம் ஆண்டு தண்டப்பணமாக 16 இலட்சத்து 16 ஆயிரத்து 500 ரூபா பெறப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி எ.அசோக திலகரத்தின தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளு மற்றும் சாராய விற்பனை, கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனைகளில் ஈடுபட்டவர்கள் உட்பட கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனைகளில் ஈடுபட்டவர்கள் மீது கடந்த வருடத்தில் மாத்திரம் 507 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சுற்றிவளைப்பு சோதனைகளின் போது 2017 ஆம் ஆண்டு மாத்திரம் 21 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
>“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா