;
Athirady Tamil News

பீகாரில் மத்திய மந்திரி மகனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு..!!

0

பீகார் மாநில பா.ஜ.க. எம்.பி. அஷ்வானி சவுபே. இவர் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை மந்திரியாக உள்ளார். அவரது மகன் அர்ஜித் ஷஸ்வத். இவர், தனது நண்பர்களுடன் இணைந்து கடந்த மார்ச் 17-ம் தேதி நடைபெற்ற மத ஊர்வலத்தில் ஆயுதங்கள் எடுத்து சென்றதாகவும், அப்போது நவீன இசை கருவிகளை பயன்படுத்தி ஆட்சேபிக்கக்கூடிய பாடல்களை இசைத்ததாக கூறப்படுகிறது.

இந்த ஊர்வலத்தின் போது ஏற்பட்ட மத கலவரத்தில் சிலர் காயமடைந்தனர். இதையடுத்து, அர்ஜித் ஷஸ்வத், மகாநகர் பா.ஜ.க. தலைவர் அபய்குமார் உட்பட 9 பேர் மீது நாத்நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மத்திய இணை மந்திரி அஷ்வானி சவுபே

இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாலும், அங்கு ராமநவமி கொண்டாடப்பட இருப்பதாலும், குற்றம் சாட்டப்பட்டவர்களால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும் அவர்களை கைது செய்ய அனுமதிக்குமாறு போலீசார் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.கே. ஸ்ரீவஸ்டவா, அர்ஜித் ஷஸ்வத், அபய்குமார் உட்பட 9 பேரையும் கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + 16 =

*