;
Athirady Tamil News

காசநோய் தினத்தை முன்னிட்டு வடமராட்சியில் நடைபயணம்..!! (படங்கள்)

0

பன்னாட்டு காசநோய்தினத்தை முன்னிட்டு காசநோய் அற்ற வடமராட்சியை தேசத்துடன் கட்டி எழுப்புவோம் என்னும் தொனிப்பொருளில் நேற்று பருத்தித்துறையில் நடைப்பயணம் இடம்பெற்றது.

பருத்தித்துறை அரசினர் ஆதார மருத்துவமனை தொற்று நோய்ப்பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நடைபயணம் பருத்தித்துறை கிராமக்கோட்டுசந்தியில் இருந்து சுமார் ஒன்றரை மைல் தூரத்தில் மந்திகையில் அமைந்துள்ள பருத்தித்துறை அரசினர் மருத்துவமனையைச் சென்றடைந்தது.

நடை பயணத்தில் மாகாணசுகாதார பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், யாழ் பிராந்திய காசநோய்தடுப்பு பிரிவு மருத்துவர் எஸ் மாணிக்கவாசகர், பிராந்திய தொற்று நோய்தடுப்பு மருத்துவ அதிகாரி மருத்துவர் ராஜீப், பருத்தித்துறை கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரிகளான மருத்துவர் எஸ் செந்தூரன், மருத்துவர் எஸ் சுதோகுமார், வடக்குமாகாண சபை உறுப்பினர்களான சிவயோகன், கே.தர்மலிங்கம், சுகாதார மருத்துவ அதிகாரிபணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது அத்தியட்கர் தலைமையில் காசநோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு உரைகளும் இடம்பெற்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + seven =

*