;
Athirady Tamil News

காவற்துறைக்கு தண்ணிகாட்டி வந்த ‘குடு நுவான்’ கைது..!!

0

கொலை மற்றும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புகொண்ட குடு நுவான் எனப்படும் நுவான் குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் விசேட படைப்பிரிவினரால் இன்று கனேமுல்லையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும் போது அவரிம் இருந்து கைக்குண்டொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குடு நுவான் எனப்படும் நுவான் குணதிலக்க கம்பஹா, கனேமுல்ல ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 5 =

*