;
Athirady Tamil News

5 பேருடன் சென்ற முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து கோர விபத்து..!! (படங்கள்)

0

ஹட்டன் காவற்துறை பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தரவளை பட்டல்கலை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி வீழ்ந்ததில் 5 பேர் படுங்காயமடைந்துள்ளனர்பு

புளியாவத்தை பகுதியிலிருந்து டிக்கோயா பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டி இன்று மாலை 3.30 மணியளவில் டிக்கோயா சாஞ்சிமலை பிரதான வீதியில் தரவளை பட்டல்கலை பகுதியில் சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள்; டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட 5 பேர் பயணித்துள்ளதாகவும், அதில் 12 வயதுடைய சிறுவன் ஒருவனும் அடங்குவதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் காரணமாகவும், சாரதி மது போதையில் இருந்ததனாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

முச்சக்கரவண்டி பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.ந்த விபத்து சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × three =

*