;
Athirady Tamil News

சிறைச்சாலைக்குள் கைதி மரணம்..!!

0

ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணையொன்றின் போது, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், அம்பலாந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கிணங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியொருவர், திடீரென சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

அம்பலாந்தோட்டை, பெரகம பிரதேசத்தைச் சேர்ந்த, 45 வயதுடைய ஒருவரே, இவ்வாறு உயிரிழந்தவராவார்.

குறித்த கைதி, கொலைக் குற்றத்துக்காக, சிறைத் தண்டனை அனுபவித்து வருபவரென்றும் இவரை, நேற்று (24) கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இவ்வாறு உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் கூறினர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × three =

*