;
Athirady Tamil News

வெளிநாடுகளில் உயிரிழப்போர் தொடர்பில் புதிய நடைமுறை..!!

0

வெளிநாடுகளில் உயிரிழக்கும் இலங்கையர்களின் சடலங்களை, இலங்கைக் கொண்டுவரவோ அல்லது ​வெளிநாட்டிலேயே இறுதிக் கிரியை​களை நடத்துவதற்கான நடைமுறைகளை இலகுபடுத்த, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கொன்சியூலர் பிரிவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுட் நடவடிக்கை எடுத்துள்ளது.

உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சமர்ப்பிக்க வேண்டிய சத்தியக் கடதாசி, அடையாள ஆவணங்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் என்பவை, இனிவரும் காலங்களில், நாடு முழுவதிலுமுள்ள பிரதேச செயலகங்கள் ஊடாக முன்வைக்க முடியுமென்று, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கொன்சியூலர் பிரிவு அறிவித்துள்ளது.

முன்னதாக, வெளிநாடொன்றில் வைத்து, இலங்கையர் ஒருவர் உயிரிழப்பாராயின், அவரது சடலத்தை இலங்கைக்குக் கொண்டுவரவோ அல்லது வெளிநாட்டி​லேயே இறுதிக் கிரியைகளை நடத்தவோ அனுமதி பெற வேண்டுமாயின், கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கொன்சியூலர் பிரிவில், உயிரிழந்தவர்களின் உறவினர்களால், மேற்கூறப்பட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

இந்நிலையிலேயே, மேற்படி ஆவணங்களை, அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் சமர்ப்பித்து, மேற்கண்ட அனுமதியைப் பெறுவதற்கான புதிய வாய்ப்பை, மேற்படி கொன்சியூலர் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தப் புதிய நடைமுறையைப் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரால், அனைத்துப் பிரதேச செயலகங்களுக்கும், சுற்றறிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × five =

*