;
Athirady Tamil News

யாழ் வீதியில் இடம்பெறவிருந்த விபரீதம் வவுனியா பொலிசாரினால் தடுக்கப்பட்டது..!! (படங்கள்)

0

வவுனியா யாழ் வீதியில் புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று இடம்பெறவிருந்த விபரீதம் பொலிஸாரின் சாதுரியமான நடவடிக்கையால் தடுக்கப்பட்டுள்ளது.

யாழ் வீதியில் அழகுசேர்த்த ஆங்கிலேயர் காலத்து வாகை மரங்கள் வீதி அபிவிருத்தியின் போது போடப்பட்ட ‘காப்பெட்’ காரணமாகவும் முதிர்வு காரணமாகவும் உயிரிழந்து காணப்பட்டது.

இந் நிலையில் விதி அபிவிருத்தி அதிகாரசபையினருக்கு பல தரப்பினரும் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டிருந்தது.

இந் நிலையில் வீதியோரத்தில் பட்டுப் போயிருந்த மரத்தின் பாரிய பகுதிக்கு விசமிகள் சிலர் தீயிட்டுள்ளனர்.
இதன் காரணமாக மரத்தின் பல பகுதிகளுக்கும் தீ பரவியிருநதபோதிலும் அங்கிருந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் தண்ணீர் ‘பௌசர்’ மூலம் நீர் கொண்டு வந்து தீயை அணைத்துள்ளனர்.

தீ அணைக்கப்பட்டிருக்காவிட்டால் தீயினால் எரிந்த மரம் வீதியில் வீழ்ந்து பாரிய விபரீதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × two =

*