;
Athirady Tamil News

உ.பி.யின் பரெய்லி ரெயில் நிலையத்தில் திரிவேணி எக்ஸ்பிரசின் ரெயில் இஞ்சின் தடம் புரண்டது..!!

0

உத்தரப்பிரதேசம் மாநிலம் பரெய்லியில் இருந்து மத்திய பிரதேசம் மாநிலத்தின் சிங்ரவுலி ரெயில் நிலையத்துக்கு செல்வது திரிவேணி எக்ஸ்பிரஸ் ரெயில்.

நேற்று அந்த ரெயில் பரெய்லியில் இருந்து புறப்பட்டு சென்றது. சிறிது நேரத்தில் அந்த ரெயிலின் இஞ்சின் திடீரென தடம் புரண்டது. இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் அலறினர். தகவலறிந்த ரெய்ல்வே அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், திரிவேணி எக்ஸ்பிரஸ் இஞ்சின் தடம் புரண்டதால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மீட்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 8 =

*