;
Athirady Tamil News

லாலு குடும்பத்தினருடன் பா.ஜ.க. எம்.பி சத்ருகன் சின்ஹா சந்திப்பு..!!!

0

கால்நடை தீவன ஊழல் வழக்கில் ராஞ்சி நகரின் ஹோட்வார் பகுதியில் உள்ள பிர்சா முன்டா சிறையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதியில் இருந்து தண்டனை கைதியாக அடைத்து வைக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் கடந்த சில நாட்களாக மலச்சிக்கல் கோளாறினால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

கடந்த 17-ம் தேதி அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், உயர் சிகிச்சைக்காக ராஞ்சி நகரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே, பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலுவை பா.ஜ.க., எம்.பி. சத்ருகன் சின்ஹா சந்தித்து நலம் விசாரித்தது குறித்து டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், பாட்னாவில் உள்ள லாலு பிரசாத் யாதவ் வீட்டுக்கு நேற்று பா.ஜ.க. எம்.பி சத்ருகன் சின்ஹா சென்றார். அங்கு அவர் முன்னாள் முதல் மந்திரி ராப்ரி தேவி மற்றும் அவரது மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

கால்நடை ஊழல் தொடர்பான 4-வது வழக்கில் லாலுவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினரை சத்ருகன் சின்ஹா சந்தித்தது குறிப்பிடத்தக்கது. #ShatrughanSinha #tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + 20 =

*