;
Athirady Tamil News

யாழில் கடையைத் திறக்கப் போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

0

சாவகச்சேரி அரசடி சந்திப்பகுதியில் வியாபார நிலையம் ஒன்றை உடைத்து திருட்டு இடம்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் சாவகச்சேரி அரசடி சந்திப்பகுதியிலுள்ள வியாபார நிலையத்தை உடைத்து அங்கிருந்து பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடை உரிமையாளர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11:00 மணியளவில் வியாபார நிலையத்தினை மூடிவிட்டுச் சென்றுவிட்டு, இன்று காலை 6:00 மணியளவில் கடையைத்திறப்பதற்குச் சென்றபோது கடை உடைக்கப்பட்டு அங்கிருந்த பணம் மற்றும் பொருட்கள் திருட்டு போயிருந்தமை தெரியவந்துள்ளது.

இதையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டப்பட்டது. சம்பவத்தில் யார் ஈடுபட்டார்கள் என்பது தெரியவரவில்லையாயினும் இதுகுறித்த விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + 13 =

*