;
Athirady Tamil News

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டம்..!!

0

சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தை இரத்து செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டம்!

குறித்த ஆர்ப்பாட்டம் கொழும்பு – கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர் சங்கம், அரச மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர்கள் சங்கம் என்பன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தை இரத்து செய்தல் மற்றும் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுத்தறுமாறு வலியுறுத்தியுயே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × four =

*