;
Athirady Tamil News

யாழ் மாநகர சபை மேயராக இம்மனுவேல் ஆனோலட் தெரிவு..!!

0

யாழ் மாநகர சபைக்கான புதிய மேயராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இம்மனுவேல் ஆனோலட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ் மாநகர சபையின் அமர்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது இதன்போது புதிய மேயரை தெரிவு தொடர்பாக கலந்துரையாடப்பட்ட நிலையில் மேயர் வேட்பாளராக மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இம்மனுவேல் ஆனோலட் 18 வாக்குகளை பெற்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார்

தமித் தேசிய மக்கள் முன்னணி சார்பில் வி மணிவண்ணன் 13 வாக்குகளும் ஈ.பி.டி.பி. சார்பில் ரெமிடியஸ் 13 வாக்கையும் பெற்றமையால் மீண்டும் தேர்தல் நடாத்துவதற்காக முடிவுசெய்யப்பட்டு திருவிளைச்சீட்டு முலம் தெரிவுசெய்ய முடிவுசெய்யப்பட்டமையால் திருவிளைச்சீட்டு முறையில் வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து புதிய மேயரை தெரிவு செய்வதற்கான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பினை நடாத்துவதற்கான நடவடிக்கைகளை வடமாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் மேற்கொண்டுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + three =

*