;
Athirady Tamil News

சாவகச்சேரி நகர சபைக்கு முதன் முதலில் பெண் தலைவர் நியமனம்..!!

0

சாவகச்சேரி நகர சபைக்கான புதிய தலைவரை தெரிவுசெய்யும் அமர்வு வடமாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பகிரங்க வாக்களிப்பு நடைபெற்றது அதனடிப்படியில் 12 வாக்குகளை பெற்று சாவகச்சேரி நகரசபையின் முதல் பெண் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இராமநாதன் சிவமங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபையின் அமர்வு இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு நடைபெற்றது இதன்போது புதிய தலைவரை தெரிவு செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்ட நிலையில் வேட்பாளராக இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இராமநாதன் சிவமங்கை12 வாக்குகளை பெற்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் யோ.ஜெக்குமார் 6 வாக்கையும் பெற்றனர்.

இதனையடுத்து சாவகச்சேரி நகரசபையின் தலைவராக இராமநாதன் சிவமங்கை .உப தலைவராக பாலமயூரன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − ten =

*