;
Athirady Tamil News

வவுனியா அபிவிருத்தி குழு கூட்டத்தில் மொழி பெயர்ப்பு..!! (படங்கள்)

0

வவுனியா அபிவிருத்தி குழு கூட்டத்தில் முதன் முதலாக சமகால மொழிபெயர்ப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த காலத்தில் மொழிபெயர்ப்பு வசதிகள் இன்மையால் அபிவிருத்தி குழு கூட்டத்தில் அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பெரும் சிரமமான நிலை காணப்பட்டிருந்தது.

இதன் காரணமாக இறுதியான நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் சமகால மொழி பெயர்ப்பு வசதிகள் வேண்டும் என அரசியலவாதியொருவரால் கோரிக்கை முன்வைக்கப்ட்டிருந்தது.

இதன் நிமிர்த்தம் இன்றைய கூட்டத்திற்கு மொழிபெயர்ப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு அனைவரும் சமகாலத்தில் மொழிபெயர்ப்பை செவிமடுப்பதற்கான கருவிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × one =

*