;
Athirady Tamil News

முதலமைச்சர் தலைமையில் அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெற்றது..!!

0

வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் மற்றும் கே. கே. மஸ்தான் இணைத்தலைமையில்; வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் 10.30 மணிக்கு வவுனியா மாவட்ட செயலகத்தில் ஆரம்பமானது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்தின் விதான பத்திரன ஆரம்ப உரையை நிகழ்த்தி அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் திணைக்கள அதிகாரிகளை வரவேற்றிருந்ததுடன் வவுனியா மாவட்டத்தின் நிலைப்பாடுகள் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விளக்கமொன்றினையும் வழங்கியிருந்தார்.

இக் கூட்டத்திற்கு இணைத்தலைவர்களான வட மாகாண முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான், மற்றும் சிவசக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், மாகாண அமைச்சர்களான ஞா. குணசீலன், க. சிவநேசன், அனந்தி சசிதரன் மற்றும் வட மாகாணசபை உறுபபினர்களான ப. சத்தியலிங்கம், ஜி.ரி. லிங்கநாதன் உட்பட திணைக்கள தலைவர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + 2 =

*