;
Athirady Tamil News

இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ஹெலிகாப்டர் – 4-வது முறையாக அத்துமீறல்..!!

0

உத்தரகாண்ட் மாநிலம் ‌ஷமோலி மாவட்டம் பரஹோட்டி பகுதியில் எல்லை கோட்டை தாண்டி இந்திய வான்பரப்பில் சீன ஹெலிகாப்டர் இன்று நுழைந்து வட்டமிட்டது.

சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் இந்திய வான் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தது ஒரே மாதத்தில் 4-வது தடவையாகும். கடந்த 10-ந்தேதி அந்நாட்டை சேர்ந்த 3 ஹெலிகாப்டர்கள் 4 கிலோ மீட்டர் தூரம் ஊடுருவி வந்து பரஹோட்டி பகுதியில் 5 நிமிடம் வட்டமடித்தன. அதற்கு முன்பு மார்ச் 8-ந் தேதியும், பிப்ரவரி 27-ந் தேதியும் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் இந்திய வான்பகுதியில் வட்ட மடித்தன.

இன்று மீண்டும் சீன ராணுவ ஹெலிகாப்டர் அத்துமீறில் நுழைந்துள்ளதால் இந்திய விமானப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 4 =

*