;
Athirady Tamil News

திருத்துறைப்பூண்டி அருகே 2-வது மனைவியை வெட்டி கொன்ற கூலித்தொழிலாளி..!!

0

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூர் கிராமத்தை சேர்ந்த வீராச்சாமியின் மகன் அய்யப்பன் (வயது 31) கூலி தொழிலாளி. இவரது மனைவி ஆரோக்கியமேரி.

இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கணவரை விட்டு ஆரோக்கியமேரி பிரிந்து சென்று விட்டார்.

இதையடுத்து அய்யப்பன் அதே பகுதியை சேர்ந்த சத்தியா (21) என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இனிலியா (3) சத்திய பாலன் ( 1 ) என 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் அய்யப்பன் தனது மனைவி சத்தியாவின் நடத்தையில் மீது சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று அய்யப்பன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து கொண்டு மணலியில் உள்ள தனது அக்கா அஜிதா வீட்டிற்க்கு சென்றுள்ளார்.

அங்கு தங்கிய அவர்கள் இடையே நேற்று நள்ளிரவு வாக்குவாதம் நடந்தது. இதில் ஆத்திரம் அடைந்த அய்யப்பன், அருகில் கிடந்த அரிவாளால் மனைவி சத்தியாவை சரமாரியாக வெட்டினார். இதில் சத்தியா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சத்தம் கேட்டு வெளியில் படுத்திருந்த அய்யப்பனின் அக்கா அஜிதா அவரது கணவர் ராஜேந்திரன் மற்றும் அக்கம் பக்கத்தினர் தடுக்க சென்ற போது அவர்களையும் வெட்டி விடுவதாக மிரட்டினார். இதனால் பயந்து போன அவர்கள் அய்யப்பனை வீட்டின் உள்ளே வைத்து தாளிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அய்யப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + 7 =

*