;
Athirady Tamil News

ஆம்புலன்ஸ் டிரைவரின் அராஜகம் – தலைகீழாக தொங்க விட்டதால் விபத்தில் சிக்கியவர் மரணம்..!!

0

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்துக்குட்பட்ட நாட்டுக்கல் பகுதியில் கடந்த 20-ம் தேதி சாலை விபத்தில் சிக்கி படுகாயடைந்த நபர் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

வரும் வழியில் அவர் ஆம்புலன்ஸ் வாகனத்தின் உள்ளே வாந்தி எடுத்தும், மலஜலம் கழித்தும் இருந்ததால் ஆத்திரமடைந்த ஆம்புலன்ஸ் டிரைவர், அந்நபரை ஒரு ஸ்டிரெச்சரில் கிடத்தி, மருத்துவமனை வாசலில் தலைகீழாக
தொங்கவிட்டுச் சென்றார்.

இந்த காட்சியை சில தொலைக்காட்சி சேனல்கள் படம்பிடித்து, ஒளிபரப்பிய நிலையில், விபத்தில் காயமடைந்தவர் கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறந்த நபர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை? என்று கூறும் போலீசார், பிறரது உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்தது உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின்கீழ் ஆம்புலன்ஸ் டிரைவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 1 =

*