;
Athirady Tamil News

வவுனியா மாவட்டத்திற்கு மேலும் 7500 வீடுகள் தேவை! மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர்..!!

0

வவுனியா மாவட்டத்திற்கு 11000 வீடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 7500 வீடுகள் தேவை என பிரதேச செயலாளர்கள் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது என வவுனியா மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி வா. கிருபாசுதன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தின் வீட்டுத்திட்டம் தொடர்பாக வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் அபிவிருத்திகுழு கூட்டத்தில் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர

வவுனியா மாவட்டத்திற்கான வீட்டுத்திட்ட தேவைகள் அதிகமாக காணப்படுகின்றன. இவ்விடயங்கள் தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சு தேசிய நல்லிணக்க அமைச்சு என்பவற்றுக்கு மாவட்ட செயலகத்தின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் 50000 வீட்டுத்திட்டம் தொடர்பாக கேள்விப்பத்திரம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. சுமார் 12 ஒப்பந்தக்காரர்கள் இவ்விடயத்திற்கு கேள்விப்பத்திரத்தினை வழங்கியிருந்தனர்.

அவைகள் சரிபார்க்கப்பட்டு அனைத்து பிரதேசத்திலும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − five =

*