;
Athirady Tamil News

கட்சிக் கோட்பாட்டிற்கு அமைய போட்டியிலிருந்து வெளியேறினோம்: ரெமிடியஸ்..!!

0

நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களில் ஈடுபட்டு காலத்தை வீணப்பது இல்லை என்கின்ற கட்சி கோட்பாட்டிற்கு அமைய முதல்வருக்கான போட்டியில் இருந்து விலகிக் கொண்டதாகவும் தொடர்ந்தும் யாழ். மாநகர சபையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாநகர சபை உறுப்பினர் மு.ரெமிடியஸ் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற முதலாவது அமர்வில் கலந்துக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர், ”நாங்கள் ஆளும் கட்சியாக இல்லாத போதிலும், முதல்வர் ஊடாக மக்கள் நலன்சார் விடயங்களை முன்னெடுப்போம்.

எதிர்வரும் காலங்களில் எமது கட்சி கோட்பாட்டின் பிரகாரம் மக்கள் நலன் சார்ந்த சகல விடயங்களுக்கும் நாங்கள் பூரண ஆதரவு வழங்கி மக்களுக்கு தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்” எனத் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 2 =

*