;
Athirady Tamil News

மக்கள் வழங்கிய ஜனநாயக உரிமையை மக்களுக்காக பயன்படுத்த வேண்டும்: ஆர்னோல்ட்..!!

0

மக்கள் வழங்கிய ஜனநாயக உரிமையை கட்சி பேதமின்றி மக்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய முறையில் செயற்படுத்த வேண்டும் என யாழ். மாநகர மேயராக தெரிவுசெய்யப்பட்டுள்ள இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற முதலாவது அமர்வில் கலந்துக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், யாழ். மாநகர மக்களின் நலனை கருத்தில் கொண்டும், அபிவிருத்தியை கருத்திற்கொண்டு அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். அதானால் அனைவரும் கட்சி பேதமின்றி ஒற்றுமையாக பயணிக்க வேண்டும்.

எங்கள் மாநகரத்தை பசுமையான மாநகரமாக மாற்ற வேண்டும். அதில் உறுப்பினர்கள் இடையில் மாற்று கருத்து இல்லை. அனைவரின் இலக்கும் ஒன்றே. இங்குள்ள வரலாற்று சின்னங்கள், சமய அனுஷ்டானங்கள் எல்லாவற்றையும் உரிய முறையில் மதிப்பளித்து அந்தந்த மத தலைவர்கள், மத சம்பிரதாயங்கள் என அனைத்தையும் மதித்து செயற்பட வேண்டும்.

யாழ்ப்பாணம் பழமை வாய்ந்த நகரம் இங்கு பல தொன்மையான சின்னங்கள் உள்ளன. நல்லூர் ஆலயம் நல்லூர் இராசதானி என வரலாற்று பின்னணி உள்ள வரலாற்று பொக்கிஷங்களை பேணி பாதுகாத்து மதிப்பளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

எனவே மக்களின் நலனுக்காக மாநகரத்தின் அபிவிருத்திக்காக அனைவரும் ஒற்றுமையுடன் பயணிப்போம். என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 4 =

*