;
Athirady Tamil News

சர்வமத தலைவர்களிடம் ஆசிபெற்றார் யாழ். மேயர் ஆர்னோல்ட்..!! (படங்கள்)

0

யாழ். மாநகரசபை மேயராக பதவியேற்றுள்ள இமானுவேல் ஆர்னோல்ட், சர்வமத தலைவர்களை சந்தித்து ஆசிபெற்றார்.

மேயராக தெரிவுசெய்யப்பட்ட பின்னர், நல்லை ஆதீனத்திற்குச் சென்ற ஆர்னோல்ட், குருமுதல்வரை சந்தித்து ஆசிபெற்றார்.

அத்தோடு, யாழ். மறைமாவட்ட ஆயரிடமும் ஆசிபெற்றார். பின்னர், ஆரியகுளம் நாக விஹாரைக்கும் இஸ்லாமிய பள்ளிவாசலுக்கும் சென்று மதத் தலைவர்களிடம் ஆசிபெற்றார்.

யாழ். மாநகர மேயர் மற்றும் பிரதி மேயருக்கான தெரிவு இன்று காலை இடம்பெற்ற நிலையில், முதலாம் கட்ட ரகசிய வாக்கெடுப்பில் 18 வாக்குகளைப் பெற்றார். இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி விலகியதைத் தொடர்ந்து யாழ். மாநாகர மேயராக ஆர்னோல்ட் தெரிவுசெய்யப்பட்டார்.

அவரை நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கட்டித்தழுவி கைலாகு கொடுத்து தமது பாராட்டுக்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 5 =

*